Friday, August 18, 2023

காணாமல் போன வர்த்தகர் கைது


காணாமல் போனதாக கூறப்படும் எம்பிலிபிட்டிய - கொலன்ன -  நேதோல பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் நேற்று (18) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் தமது நண்பரின் வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 


குறித்த வர்த்தகர் கடனாளிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காணாமல் போனதாக நடித்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment