Wednesday, December 9, 2015

வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் சந்தேகம் - ஜனவரி 7ம் திகதி மீளவும் விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் கொலையா அல்லது விபத்தா என்பதனை நீதிமன்றம் இன்றைய தினம் அறிவிக்கவில்லை. தாஜூடீனின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவி வருவதாக கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

எனினும், இந்த மரணம் கொலையா அல்லது விபத்து என்பதனை உறுதியாக அறிவிக்க ஏனைய அறிக்கைகளையும் பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய அனைத்து அறிக்கைகளையும் பரிசீலனை செய்து மரணம் பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.

தாஜூடீன் மரணம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை என்றே தெரிகிறது எனவும், அனைத்து விபரங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment