Tuesday, December 8, 2015

கிறிஸ்துவ நாடு என்ற, அந்தஸ்தை இழக்கும் இங்கிலாந்து

கிறிஸ்துவ நாடு என்ற அந்தஸ்தை இங்கிலாந்து இழக்கவுள்ளதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

உலக நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் வசிப்பது இங்கிலாந்தில் தான்.

இந்நிலையில் தற்போது இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்கவுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும் கூட சிறந்து விளங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment