Sunday, December 6, 2015

ஹாபிஸ் விரைவில் ராஜினாமா, ஹஸன் அலி எம்.பி. யாகிறார்

-நஜீப் பின் கபூர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ஹாபிஸ் தனது எம்.பி. பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.

தேசியப் பட்டியல் மூலம் தெரிவான இவரின் இடத்திற்கு கட்சியின் செயலாளரான எம்.ரீ ஹஸன் அலி நியமிக்கப்படவுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

அத்துடன் மு.கா.வின் எஞ்சி இருக்கின்ற ஓரிரு அடையாளச்சின்னங்களில் ஒன்றாய் இருக்கின்ற ஹசனலிக்கு கட்டாயம் எம்.பி. பதவி வழங்கியாக வேண்டும் என்றும்  நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

அடுத்து திருகோணமலை எஸ்.எம். தௌபீக்கிற்கும் தேசியப் பட்டியல் வழங்குவது மு.கா.வுக்கு ஆரோக்கியமாக இருக்கும். இந்தப் பதவியை வேண்டுமானால் பகிர்ந்து கொடுக்கலாம்.

கிராமங்கள்-வீதிகள் தோறும் ஹக்கீம் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை. நாம் தொடர்ந்தும் வலுயுறுத்தி வருவது போல் இந்தக் பதவிகளை வழங்க தலைமை முடிவெடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment