Wednesday, December 9, 2015

இஸ்லாமிய சகோதரர்கள் இனிமேல்தான், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கிருஷ்ணசாமி கண்ணன்


நாம் சொல்ல நினைத்ததை நான்கே வரியில் இரத்தின சுருக்கமாக கூறியுள்ள சகோதரர்.....!!

குஜராத்தில் 2001 ஆம் ஆண்டு பூகம்பம் வந்த போது குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் இதேப்போன்ற மீட்புப்பணியில் ஈடுபட்டு, உணவு, உடை, இரத்தம் கொடுத்து இந்து மக்களை காப்பாற்றினர்.

அப்போது TNTJ வும் தமுமுகவும் ஒன்றாக இருந்த காலக்கட்டம், குஜராத் பூகம்பத்திற்கு ஒன்றிணைந்த தமுமுக சார்பாக ரூ 10 லட்சம் தமிழகத்திலிருந்து குஜராத்திற்கு வழங்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 10 லட்சம் என்றால் இன்றைய மதிப்பில் ரூ 1.5 கோடியை விட அதிகம், 

மேலும் இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குஜராத் பூகம்பத்தின் போது மீட்பு பணி, நிவாரண பணி என்று பல்வேறு மனிதநேய உதவிகளை வழங்கினர். 

இப்போது எழுதுவது போல் அப்போதும் பத்திரிக்கைகள் மதத்தை வென்றது மனிதநேயம் என்று எழுதினார்கள்.

அவ்வாறு எழுதப்பட்டு ஒரே வருடத்தில் யாருடைய இரத்தம் தன்னுடைய உடலில் ஏறியதோ அவனுடைய இரத்தத்தையே குடித்த பாஜக இந்துத்துவா கூட்டம் தான் குஜராத்தில் மனித மிருகங்களாக வாழ்கின்றனர்.

இரண்டே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். நரவேட்டையாடப்பட்டனர். நாடு முழுவதும் மரண ஓலங்கள்,

ஆகையால் ஐயா சொல்லும் கூற்று 100 சதவீதம் உண்மை,

அதேசமயம் இது குஜராத்தோ அயோத்தியோ அல்ல, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர் போன்ற பல்வேறு தலைவர்களால் பண்படுத்தப்பட்ட தமிழக மண்,

இங்கு முஸ்லிம்கள் மீது பாஜக கை வைத்தால் முதல் அடி இந்துவின் அடியாக தான் இருக்கும். 

எச்சரிக்கையான கருத்தை சொன்ன ஐயா கிருஷ்ணசாமி கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...


No comments:

Post a Comment