எம் எம் சபீர் (நத்வி)
இன்று தமிழக சினிமா நடிகர்கள் ஒரு சிலர் தமது திரைப்படங்களில் இஸ்லாம் மார்க்கத்தை கொச்சைப்படுத்தி இஸ்லாத்தை ஓர் தீவிரவாத மார்க்கமாகவும் முஸ்லிம்களை கொள்ளைக்காரர்களாகவும் மனித நேயமற்றவர்களாகவும் பிறமனிதனின் உயிர் உடமை உதிரம் போன்றவற்றை சுரண்டி வாழ்கிறவர்களாவும் சித்தரிப் பதுடன் தம்மை சமூக அக்கறை கொண்டவர்களாகவும் வர்ணித்து உலகுக்கு காட்ட முயற்ச்சிக்கின்றனர். அதனை ஒரு சமுகம் கைதட்டி ஆரவார கூச்சல் போட்டுக்கோண்டு தமது ஆதரவையும் வழங்குவதுடன் தமது நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறது .
இன்று தமிழக சினிமா நடிகர்கள் ஒரு சிலர் தமது திரைப்படங்களில் இஸ்லாம் மார்க்கத்தை கொச்சைப்படுத்தி இஸ்லாத்தை ஓர் தீவிரவாத மார்க்கமாகவும் முஸ்லிம்களை கொள்ளைக்காரர்களாகவும் மனித நேயமற்றவர்களாகவும் பிறமனிதனின் உயிர் உடமை உதிரம் போன்றவற்றை சுரண்டி வாழ்கிறவர்களாவும் சித்தரிப் பதுடன் தம்மை சமூக அக்கறை கொண்டவர்களாகவும் வர்ணித்து உலகுக்கு காட்ட முயற்ச்சிக்கின்றனர். அதனை ஒரு சமுகம் கைதட்டி ஆரவார கூச்சல் போட்டுக்கோண்டு தமது ஆதரவையும் வழங்குவதுடன் தமது நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறது .
தமிழ்நாட்டி பெப்ரவரி 7, 2013 வெளியிடப்பட்ட விஸ்பரூபம் திரைப்படம். இஸ்லாமிய மத உணர்வை நிந்தித்து முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டது இதனால் அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது மாறாக இத்திரைப்படம் சிறுகுழந்தை முதல் பெரியவர் வரை தீவிரவாதத்தை வளர்க்கிகிறது என்பதே உண்மை.
இதல்லாம் அவர்கள் இஸ்லாம் மதத்தில் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியே காரணமாகும்.ஒரு போதும் இவர்கள் தீர்மானிப்பது போல் இஸ்லாம் கிடையாது இஸ்லாம் ஓர் தூய மார்கமாகும் தூய கடவுல் கொள்கையயும் மனித நேயத்தையும் மாட்சிமை பொருந்திய பண்பாடுகளையும் கூறவந்த மார்கமாகும்.
உண்மையில் இஸ்லாம் மதம் மனித நேயத்தை மதக் கொள்கையாக போதிக்கும் ஓர் மதமாகும். என்பதை தமிழக வெள்ள அனர்த்தம் எமக்கு உணர்த்துகிறது. இன்று தமிழகத்தில் இயற்கைமாற்றத்தால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம் மதம் ஜாதி பாராமல் எதுவித இலாப நட்டமுமின்றி எதிர்பார்ப்புகளுமின்றி துரிதமாக முஸ்லிம் சகோதரர்கள் பணியாற்றினார்கள்.
தான் பணிசெய்ய முன் பலன் எதிர்பாக்கும் இக்காலத்தில். எதுவித பகட்டு காரணமுமின்றி இலாப நட்டமுமின்றி துரிதமாக செயற்பட வைத்து எது ?? இஸ்லாம் ஒன்று மட்டும்தான் விடையாக அமைகிறது. இறைவனிடம் கூலியை எதிர்பார்த்து தமது பணிகளை செய்கிறார்கள்.
ஆனால் அந்த புனித இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சினிமா நடிகர்கள் தமது படங்களில் வசை பாடுவது பொருத்தமற்ற செயல் என்பதனை அறிய முடிகிறது. எவ்வளவுதான் இஸ்லாத்தினை துற்றினாலும் இஸ்லாம் சிறந்த தனித்துவமான பன்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அது மெலோங்கிச் செல்லும் மார்க்கமாகும். அப்பாவியை கொலைசெய்ய ஆயுதம் ஏந்தியவன் தீவிரவாதி என்று உரத்து கூறும் மார்க்கம்தான் இஸ்லாம். பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம், மற்றும் சமூக உணர்வு, சக மனிதர்களிடம் அன்பு காட்டுதல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், போன்ற பண்புகளானது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
இதனை இஸ்லாம் பின்வருமாறு எமக்கு உணர்த்துகிறது.
""உங்கள் முகங்களை கிழக்குநோக்கியோ, மேற்கு நோக்கியோதிருப்புவது நன்மையன்று. மாறாகஅல்லாஹ், இறுதி நாள், வானவர்கள்,வேதம், மற்றும் நபிமார்களைநம்புவோரும் உறவினர்கள்,அனாதைகள், ஏழைகள், நாடோடிகள்,யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளைவிடுதலை செய்வதற்கு (மன)விருப்பத்துடன் செல்வத்தைவழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தைவழங்குவோரும், வாக்களித்தால் தமதுவாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை,நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக்கொள்வோருமே நன்மை செய்பவர்கள்.அவர்களே உண்மை கூறியவர்கள்.அவர்களே (இறைவன) அஞ்சுபவர்கள்.""""""
அல்குர்-ஆன் 2 : 177
""""அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்"""" அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4661)
"":அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும்."" அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (51)
இப்படி நிரய செய்திகளில் இஸ்லாம் மனித நேயத்தை போதிக்குகிறது. இன்று உலக அளவில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருக்கின்றன. அதிலும் ஒரு சில மதம் பிரதான மதமாக கணிக்கப்படுகிறது. ஓர் மத்தைசார்ந்தவன் ஓரு தீவிரவாத செயலில் ஈடுப்படால் அதன் விளைவு அவனை மாத்திரம்சார்கிறதே தவிர அவன் பின்பற்றிய மதத்தை அல்ல.
உதாரணமாக தாம் இந்து மதத்தினர் என்று வாதிடுபவர்களாக இருப்பின். அவர்களது நீதி நூல்கள் மனித நேயத்தோடு வாழுமாறு கூறுகிறது. ஆனால் இந்து மதத்தினை சேர்ந்த ஒருவர் ஓர் மனிதநேயமற்ற செயலை செய்தால் இந்து மதம் மனிதநேயமற்ற மதம் மனித நேயத்தைபோதிக்கவில்லை என்று எந்த ஊடகமும் கூறுவதில்லை. அப்படி கூறுவதும் அறிவுடமையல்ல. ஆனால் முஸ்லிமென தன்னை அடையாலப்படுத்திக்கொண்ட ஒருவன் ஓர் தீவிரவாத செயலை செய்தால் இஸ்லாம் மார்க்கம் தீவிரவாத மார்க்கம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது நியாயமானதா ?
மஸ்ஜிதுகள் தீவிரவாதத்தை வளர்க்குமிடம் என்று உடைப்பது நியாயமானதா? கொடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காக வேண்டி நடிகர்கள் சினிமாக்களில் இஸ்லாத்தை கெச்சைப்படுத்துவது நியாயமானதா? எந்த மதபோதனைகளையும் அதை சார்ந்தோர் நூறு விகிதமானவர்கள் எடுத்து நடப்பார்கள் என்று நம்புவது மடமை.
ஆனால் இவ்வுலகில் உள்ள மதபோதனைகளில் இஸ்லாமிய மதபோதனைகளை அதிகமானவர்கள் வாழ்நாளில் எடுத்து நடக்குகிறார்கள் என்பது உண்மை. இஸ்லாம் கூறும் மதபோதனைகளை அறிவியலை விட மேலாக மதித்து நடைமுறை வாழ்வில் கெண்டுவரும் சமுதாயம் முஸ்லிம்கள். ஒரு சில முஸ்லிம் பெயர்தாங்கிகளின் நடத்தையினை பார்த்து இஸ்லாத்தை அறிய மனித சமுதாயத்தை பின் நோக்கி தள்ளிச்சென்று இஸ்லாத்தை தீவிரவாதம் போதிக்கும் மதமாக சித்தரிக்க காரணமாக அமைவதுடன் இஸ்லாமிய தூய கடவுல் கொள்ளையினை புறக்கணித்து விலகிச்செல்லவும் இஸ்லாம் பற்றி அவதூறு பரப்பவும் துணைபுரிகிறது.
No comments:
Post a Comment