Sunday, December 6, 2015

வடக்கு + கிழக்கு மாகாணங்கள், இனிமேல் இணைக்கப்படாது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படமாட்டாது என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்விய ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வேலைத்திட்டங்களின் கிரயங்களை குறைக்கும் நோக்கில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைக்கும் எண்ணம் இல்லையா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதில் வழங்கிய அவர், பொருளாதார காரணங்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் எண்ணம் இல்லை.

தற்போது நாட்டில் இன, மத ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் பூகோளரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்க காரணங்களை உருவாக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment