சுதந்திர சட்டதரணிகள் சங்கம் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஶ்ரீ நாத் பெரேரா அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
அரசியல் பழிவாங்கலைத் தொடங்கும் நோக்கத்துடன் தற்போதைய அரசாங்கம் செயல்படுகிறது என்பதை இந்த நாட்டின் சட்டத்தை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
நாட்டின் நீதியை தமது நண்பர்களுக்கு அவர்களுடைய விடுவிப்புக்கு ஒருதலைபட்சமாக பாவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கவலையுடன் கூறியே ஆகவேண்டும் இத்தகைய சீர்கேடுகளுக்கு எதிராக முன்னிக்கக் கூடிய அனைத்து தேசிய சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.
சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தரணிகள் மாத்திரம்தான் முன்னிற்க வேண்டுமென்ற தேவை இல்லை, சகல தரப்பினரும் இதற்காக குரல் கொடுக்கலாம். கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டிற்கு பின்னால் மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத செயற்பாடுகள் மறைமுகமாக செயற்படுத்தப்படுகிறது,உள்ளக ரீதியாக முன்னெடுக்கப்படுகிறது.
அண்மையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றின் முடிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.அதிலுள்ள சில விடயங்கள் மூலமாக சட்டத்துறை சார்ந்த பல கேள்விகள் பல சிக்கல்கள் எழுகின்றன, கொலை செய்யப்பட்ட வெளிப்படையான சாட்சிகள் இருக்கும் ஒரு பிரபல அரசியல்வாதியின் விடுதலையின் மூலம் இது புலப்படுகின்றது இதனை சரி காண்பதற்கு கூறும் காரணம் தான் விசாரணையை முன்னெடுத்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் குறிப்பிட்டு நபருடன் குறிப்பிட்ட உரையாடியுள்ளார் என்ற காரணமாகும் ,இதில் பிரிதொரு காரணமும் உண்டு அதாவது இந்த மூன்று நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பை குறைத்து மதிப்பிடுகின்ற, அரச நிறுவன அதிகாரிகளை குறைத்து மதிப்பீடு செய்கின்ற ஒரு கலாசாரம் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. இந்த ஒருமித்த தீர்வை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுவிக்குமாறு நிபந்தனையிட்டுள்ளது. எனது 45 வருட சட்டத்துறை வரலாற்றின் இதற்கான முடிவை காண்பதென்பது சிக்கலாக தோன்றுகின்றது.1948 14வது சட்ட பிரிவின் திறுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பிரகாரம் அவ்வாறு நியமிக்கப்படும் எந்த ஒரு ஆணை குழுவிற்கும் சட்டரீதியான அதிகாரம் இல்லை.இவ்வாறு அதிகாரமற்ற ஆணைக்குழு ஒன்று அதன் இறுதி முடிவின் அடிப்படையில் குற்றவாளியாக்கப்பட்ட தண்டனையாலரை விடுவிக்க கூறுவது அரசியல் அமைப்பின் மூலம் பலமாக ஸ்தாபிக்கப்பட்ட நீதித்துறைக்கு சவாலாக அமைகின்றது.தொடர்பான புதிய அறிவை பெற்றுக் கொள்வதற்கு நான் மீண்டும் சட்டக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
அதிகாரமற்ற ஆணைக்குழு அதன் மூன்று அங்கத்தவர்களும் நிபந்தனைகள் இடுகின்றார்கள்,குற்றவாளியாக்கபட்டவரை விடுதலை செய்யுமாறு அவ்வாறு கூறுவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த அதிகாரமும் அவர்களுக்கோ அந்த ஆணைக்குழுவிற்கோ,அந்தக் கட்டமைப்புக்கோ இல்லை.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் 8ம் பிரிவு 22 நபர்களின் பெயரை குறிப்பிட்டு அரச வளங்கள் மற்றும் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
முன்னைய அரசாங்கத்தின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தவர்கள் அவர்களுடைய நியமனம் தொடர்பாக அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவுமில்லை,
எந்த ஒரு பணிப்பாளர் சபை கூட்டங்களுக்கோ அல்லது இன்னொரு கொடுப்பணவுக்கோ அவர்களுக்கு எந்த ஒரு வரப்பிரசாதங்களுக்கோ உட்படுத்தப்படவில்லை.
அவ்வாறு இருக்கும்போது நம் நாட்டில் ஒரு நீதி தத்துவம் இருக்கிறது அதுதான் ஒருவர் குற்றம் புரிந்திருந்தால் அக்குற்றம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் பிரகாரமே குற்றப்பத்திரிகை அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும். ஆனால் இந் ஆணைக்குழுவின் தீர்ப்பின் பிரகாரம் அத்தகைய முக்கியத்துவமிக்க தத்துவம் பின்பற்றப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது.
அரசியல் அமைப்பு ரீதியாக நீதிமன்ற கட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள நீதித்துறை சார்ந்த அதிகாரத்தின் மூலம் ஒரு குற்றம் அதுசார்ந்த விசாரணைகள் பகுப்பாய்வுகள் சாட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வுகள் வழங்க அதிகாரம் படைத்த ஒரு ஜனநாயக கட்டமைப்பு அதிகாரம் அற்ற ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் செல்லுபடியற்றதாக மாற்றுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்ட 22 நபர்களின் குற்றம் சார்ந்த சான்றுகளை அல்லது தம் பக்கமுள்ள நியாயங்களை ஒப்பு வைப்பதற்கான அல்லது அது தொடர்பான வாய்மொழி மூலமான சான்றுகளைக் கூட அந்த ஆணைக்குழு உள்வாங்கவில்லை இது ஜனநாயக விரோத செயல். இது மிகக் கீழ்த்தரமான விடயமாகும். அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த சொலிசிட்டர் ஜெனரல் ஐ ஆணைக்குழுவிற்கு பரிந்துரைப்பதாக இருப்பின் சட்டமா அதிபரின் அனுமதி பெற்று நடந்திருக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெற்று தனது அரச சேவையின் ஓர் அங்கமாக கருதி அந்த ஆணைக்குழுவில் அவர் பங்கேற்று இருப்பார் என்றே நான் நம்புகின்றேன்.
இத்தகைய அரச சேவைக்கு அரசியல் மூலமாக ஆணைக் குழுக்களை நியமித்து அவர்களை ஒருதலைபட்சமாக தண்டிப்பது என்பது ஜனநாயக விரோத செயலாகும்.
இவ்வாறு இந்நாடு முன்னோக்கி செல்லும் ஆக இருந்தாள் அண்மையில் மியன்மாரில் ஏற்பட்ட நிலை அல்லது அதையும் விட பாரதூரமான ஒரு நிலை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. எனவே ஒரு நாடாக இவ்வாறு எங்களால் முன்செல்ல முடியாது சகல இனம் மதம் குலம் சேர்ந்தவர்கள் ஒன்றித்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment