Wednesday, April 21, 2021

பயணங்களைக் குறையுங்கள், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றுங்கள்


நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக மீண்டும் அவதானமொன்று தோன்றியிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

பயணங்களைக் குறைத்துக்கொண்டு முறையான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை மக்களின் வாழ்க்கையை சாதாரண உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்காக பாடசாலைகளுக்கு மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்டு சில தளர்வுகளை மேற்கொண்டோம். இவற்றை மக்கள் தவறாகப் பயன்படுத்தாது பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

இந்தியாவில் பரவிவரும் புதிய வகையிலான வைரஸினால் வெளிநாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எமது நாடும் இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

எமது நாட்டில் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், கடுமையான சுகாதார விதிமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்துங்கள். சுகாதாரப் பிரிவினரால் தொடர்ந்தும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment