உலகப் பல்கலைக்கழகத் தர வரிசையில் டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கு இந்திய அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ அமைப்பு, உலகப் பல்கலைக்கழகத் தர வரிசையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை ஜாமிஆவுக்கு வழங்கியுள்ளது.
சென்ற ஆண்டில் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“மிக உயர்தரமான ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கற்பிக்கும் முறை, வெளியீடுகள் போன்ற சிறப்புத் தகுதிகள்தாம் ஜாமிஆவுக்கு உலக அளவிலான ஏற்பிசைவை(அங்கீகாரம்) தந்துள்ளன.
எதிர்காலத்தில் முதலிடம் பெற தொடர்ந்து உழைப்போம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஜாமிஆ மில்லியாவின் துணைவேந்தர் நஜ்மா அக்தர்.
-சிராஜுல்ஹஸன்
No comments:
Post a Comment