Friday, October 27, 2023

உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும்...


 - Ashroff Shihabdeen -


நேற்றிரவு ஒரு குத்பா பிரசங்க வீடியோவைப் பார்த்தேன். அநேகமாக அது காஸா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அறபுத் தலைவர்களுக்கு, உலகத்துக்கு, முஸ்லிம் சமூகத்துக்கு, பொய்சொல்லும் மேறகு மீடியாக்களுக்கென்று தனித்தனியாக இமாம் செய்திகளைப் பிரித்துச் சொன்னார். 


மிகவும் தாக்கம் தரும் உரை. குத்பா ஆங்கிலத்தில் இருந்தது. அவர் ஒவ்வெரு விடயத்துக்கும் அல்குர்ஆன் வசனங்களை முன்வைத்துப் பேசினார். இமாம் வயதில் மிக இளையவர். 27 அல்லது 28 வயதிருக்கலாம். ஆற்றொழுக்கான அவரது ஆங்கிலமும்அறபும் என்னை ஆச்சரியப் படுத்தின.


மேற்கு மீடியாக்கள் திட்டமிட்டுச் சொல்லும் செய்திகள் யாவும் பொய்கள் என்பது நிரூபணமாகி வருகின்றன. அவற்றைக் கேட்டுத் திகைக்காதீர்கள். அவர்கள் பொய்களைத் தவிர வேறெதுவும் சொல்வதில்லை. 


அப்படி வரும் செய்திகளுக்கு உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எழுத்தால் முடியுமானால் எழுத்தால், குரலால் முடியுமானால் குரலால் உங்கள் எதிர்ப்பை வெளியிட்டுக் கொண்டேயிருங்கள் என்பது முஸ்லிம் உம்மத்திடம் அவரது வேண்டுகோளாக இருந்தது!

No comments:

Post a Comment