ஜோதிடர் இந்திக தொட்டவத்த தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் பட்சத்திலும் வெளியிட்ட வீடியோக்கள் வாபஸ் பெறப்பட்டு சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு பொது மன்னிப்பை வழங்குவதற்கு சமூகத் தலைமைகள் சிபாரிசு செய்வதே சிறந்தது எனக் கருதுகிறேன்.
அதேவேளை அவர் இறைதூதர் பற்றி வெளியிட்டுள்ள தப்பபிப்பிராயங்கள் தொடர்பிலான தெளிவுகளை வழங்கும் நூல்களை அன்பளிப்புச் செய்வதோடு, அவருக்கு அவை தொடர்பில் ஒரு குழுவினர் தெளிவையும் வழங்க முயற்சித்தால் நல்லது.
இஸ்லாம், முஸ்லிம், அல்குர்ஆன், ஷரீஆ, இறைதூதர் (ஸல்) பற்றிய தவறான காழ்ப்புணர்வு பரப்புரைகள் அரசியல் உள்நோக்கங்கள் நிகழ்சி நிரல்களுடனேயே கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறனவர்களை பிழையான தரப்புக்கள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றன!
- மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -
No comments:
Post a Comment