Friday, January 19, 2024

"அல்லாஹ்வின் மீது (அவன் நமக்கு நல்லதைத்தான் செய்வான் என) நல்லெண்ணம் கொள்வது அழகிய வணக்கமாகும்"


"துக்கம் உங்களை மூழ்கடித்தாலும், சூழல் உங்களுக்கு கடினமாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களைவிட மிக நன்றாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்களானால், நீங்கள் மிகவும் மன வலிமையடையவீர்கள்".


ஏக இறைவன் உங்களுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் விதிக்க மாட்டான் என்றும், உங்களிடமிருந்து எதை எடுத்துக் கொண்டாலும், அவன் உங்களை திருப்திப்படுத்தும் வகையில் உங்களுக்கு வேறொன்றை ஈடுசெய்வான் என்றும், அவனுடைய நடவடிக்கைகள் அவை நீங்கள் விரும்புவதற்கு மாறாக இருந்தாலும், உங்கள் நலனுக்கான துதான் என்று அவன் மீது நல்லெண்ணம் கொண்டு நீங்கள் உறுதியாக நம்பும் போதும் உங்கள் மன அழுத்தம் விலகக் காண்பீர்கள்.

عن أبي هريرة رضي الله عنه ، أنَّ رسول الله صلى الله عليه وسلم قال: «إن حسن الظن بالله تعالى من حسن العبادة» رواه أبو داود والترمذي

"அல்லாஹ் வின் மீது (அவன் நமக்கு நல்லதைத் தான் செய்வான் என) நல்லெண்ணம் கொள்வது அழகிய வணக்கமாகும்"

நபிமொழி (அபுதாவூத், திர்மிதீ)

-முஹம்மது இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி-

No comments:

Post a Comment