Wednesday, December 9, 2015

குவைத்திற்கான இலங்கை தூதகரத்தில், தங்கியிருந்த 83 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து குவைட்டில் உள்ள இலங்கை தூதகரத்தில் தங்கியிருந்த இந்நாட்டு வீட்டுப்பணிப்பெண்கள் 83 பேர் இன்று (09) இலங்கை வந்தடைந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் தலதா அதுகோரால குவைட்டிற்கு மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை தொடர்ந்து குறித்த வீட்டுப்பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment