Wednesday, December 9, 2015

இந்தியாவுடன் சீபா இல்லை - ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு

சீபா எனப்படும் இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையொப்பமிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் சமகால நிலைமை தொடர்பாக இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை அவர் ஆற்றியிருந்தார்.

பாதீட்டின் 3 வது வாசிப்பின் மீதான ஆறாவது நாள் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதாக ஒரு சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், வேறு எந்த பெயரிலேனும் குறித்த உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சத்திடாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment