Tuesday, December 8, 2015

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக றாபி, இர்ஷாத் திருகோணமலைக்கு மாற்றம்

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த ஏ.ரி.எம்.றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை இன்று  (08) அம்பாறை நகரில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் இவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்தார்.

அதேவேளை கடந்த சுமார் பத்து வருடங்களாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.ஆர்.எம்.இர்ஷாத் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நியமனங்க்களை கிழக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment