மஹிந்த ராஜபக்ச தரப்பினர் நாட்டை சீர்குலைக்கும் தொடர்முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பகைமை அரசியலைக் கைவிட்டு நாடு இணக்க அரசியலில் பயணித்துக் கொண்டிருந்தாலும் மஹிந்த தரப்பிற்கு பகைமை உணர்வுகள் இன்னும் மாறவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு சிக்கல்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒளிவுமறைவாக மேற்கொள்ளப் போவதில்லை. வெளிப்படையாககே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம்பெறும்.
ராஜபக்ஷ தரப்பின் பிழையான செயற்பாடுகள் காரணமாகவே இந்நாட்டுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காமல் போனது. அவர்களின் ஆட்சியில் போன்று எமது ஆட்சியில் வெள்ளை வான் கடத்தல்கள் நடைபெறுவதில்லை.
ஆனாலும் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ராஜபக்ஷ தரப்பினர் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துக்கு எதிரான சதிவேலைகளை முன்னெடுக்கின்றனர் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment