அவுஸ்திரேலிய மானுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள், தம்மை கொலை செய்ய உதவிசெய்யக்கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதம், அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தில் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
சட்டவிரோத படகுகள் மூலம் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மானுஸ்தீவில் பல நாடுகளை சேர்ந்த சுமார் 900 அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 600பேர் வரை இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
தங்களின் விடுதலையைக்கோரி பலதடவைகளாக கோரியபோதும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அதனை புறக்கணித்துவிட்;டது.
எனவே துன்பமான முகாம் வாழ்க்கைக்கு பதிலாக இந்த தம்மை கப்பல் ஒன்றில் ஏற்றி, கடலில் மூழ்கடித்;து அல்லது விஷவாயுவை பயன்படுத்தி அல்லது விஷ ஊசி ஏற்றி கொலை செய்துவிடுமாறு அகதிகள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment