Monday, December 7, 2015

"அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள், உட்பிரவேசிப்பதை மொத்தமாக தடைசெய்க"

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடகூடிய குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் உட்பிரவேசிப்பதை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தில் 14 பேர் பலியாக காரணமாக தாக்குதல்களை முஸ்லிம் கணவன் மனைவி இரண்டு பேரே நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் முஸ்லிம்களால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்களை முற்றாக அமெரிக்கா தடை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளது.

இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த கருத்து ஒரு அமெரிக்கர் அல்லாதவரின் கருத்து என்று, வெள்ளை மாளிகையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment