Tuesday, December 8, 2015

இயக்க பகைகளை மனதில்வைத்து ஷரீஆ சட்டத்ததை விமர்சிப்பதும், சவூதியின் கடமைகளும்..!

-ஆதம்பாவா ஜலீல்-

பேசு பொருளாகியுள்ள இஸ்லாமிய சட்டமும் தண்டனையும், சஊதி அரேபியாவின் ஷரீயா சட்டம் கடுமையான 

விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், நமது சில முஸ்லிம் ஆசாமிகளும் சில இயக்க பகைகளை மனதில் வைத்துக்கொண்டு விமர்சிப்பது வேதனைக்குரியது. முதலில் சஊதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக செல்பவர்கள் SLBFE யின் ஊடாக சஊதி யின் சட்ட திட்டங்களுக்கு அமைய அங்கே செயற்படுவேன் என்ற உடன்படிக்கைக்கு இணங்கியே செல்கின்றனர். சஊதி சட்டம் கடமையானது என உணர்ந்தால், ஒன்று பணியாளர்கள் செல்லாமல் இருக்க வேண்டும், அல்லது இலங்கை அரசாங்கம் அதை தடை செய்ய வேண்டும் அல்லது சஊதி தவிர்ந்த வேறு முஸ்லிம் நாடுகளுக்கு செல்ல வேண்டும். அதை விடுத்து வீணாக சில அரசியல் நோக்கங்குளுக்ககவும், இயக்க பகைகளை மனதில் வைத்துக்கொண்டு விமர்சிப்பது இதற்கு தீர்வல்ல. 

உதாரணமாக, சிங்கப்பூரில் போதைப்பொருள் கொண்டு செல்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது அந்நாட்டு விதி. அதே நேரம் இலங்கையில் ஆயுள் தண்டனை அல்லது நான்கு வருடங்களின் பின் நாடு கடத்தப்படுவர். இலங்கையை சேர்ந்த ஒருவர் போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் பிடிபட்டால், அவருக்கு அங்கே மரண தண்டனை வழங்கப்படுவதை நாம் விமர்சிக்க முடியாது, ஏனென்றால் அது அவர்களின் நாட்டு சட்டம். அவர்களின் இறையாண்மையில் நாம் தலையிட முடியாது. இதே நிலைதான் சஊதி விடையத்திலும். எத்தனையோ அந்நிய மதத்தவர்கள் கூட எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று பணி புரிந்து வருகிறார்கள். விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள இந்த கொழும்பை சேர்ந்த நபர் நான்கு முறை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்கு குற்றவாளி என்ற ரீதியில் அந்நாட்டு சட்டப்படி தண்டனை வழங்குவதை விமர்சிக்கும் உரிமை எமக்கு இல்லை, மாறாக சஊதி அரசாங்கத்திடம் குர்ரவாள்ளியின் நிலையை விளக்கி அரசாங்கம் மூலம் தண்டனை குறைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபச்சாரத்தை தூண்டக்கூடிய சூழ்நிலை இல்லாத சூழ்நிலையிலேயே தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மற்றைய இஸ்லாமிய நாடுகளை போலல்லாது, சஊதியில் இந்த இஸ்லாமிய சூழல் காணப்படுகிறது. இதை தகர்த்து, ஜனநாயகம், உரிமை என்ற பெயரில் மக்கா, மதீனா புனிதச்தலங்க்களை சகல இன மக்களையும் அனுமதிப்பதன் மூலம், ஒரு சுற்றுலா பிரதேசம் போல் ஆக்க வேண்டும் என்பதே சர்வதேச சூழ்ச்சியாளர்களின் சதி.  ஒருவர் இஹ்ராம் உடுத்துக்கொண்டு ஹஜ், உம்ரா செய்ய , தூய எண்ணத்துடன் சஊதி விமான நிலையத்தில் இறங்கியதும், குட்டை பாவாடையுடனும், மேற்கத்திய ஆடைகளுடனும் எங்கும் உலாவுவதை கண்டால், அவரின்  புனித பயண என்னத்துக்கு அது எப்படி இடைஞ்சலாக இருக்கும் என்பதே நீங்களே கற்பனை செய்து பாருங்கள். எனவே புனித கடமைகளுக்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது சஊதி அரசாங்கத்தின் கடமை ஆகும். இவாறு உருவாக்க, சில இறுக்கமான சட்டங்களை இஸ்லாமிய வரையறைக்குள் உர்வாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

No comments:

Post a Comment