பயங்கரவாத இயக்கங்கள் தலைதூக்கக்கூடிய சூழ்நிலைமை நாட்டில் மீளவும் உருவாகியுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் நாட்டுக்குள் தலைதூக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையில் உருவாகி வருகின்றன.
எனினும் அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து எவ்வித கவனத்தையும் செலுத்துவதில்லை.
புலனாய்வுப் பிரிவினை பலவீனப்படுத்திய பொறுப்பினை இப்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆட்சியாளர்களின் கோழைத்தனங்களினால் நாட்டின் பாதுகாப்பு பாரியளவில் கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆட்சியாளர்களின் தூரநோக்கற்ற நடவடிக்கைகளினால் இனம் என்ற ரீதியில் பெரும் பாவத்தை அனுபவித்து வருகின்றோம் என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment