Tuesday, December 8, 2015

தாய் வௌிநாட்டில், தந்தை கவனிப்பதில்லை, நாங்கள் தவிக்கிறோம் - 4 பிள்ளைகள் பொலிஸில் முறைப்பாடு

தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தவிக்கும் தன்னையும் தனது சகோதர சகோதரிகளையும் தந்தை கவனிப்பதில்லை எனக் கூறி 16 வயது சிறுவன் ஒருவர் கெபிதிகொல்லாவ பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

கெபிதிகொல்லாவ - கணுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு பொலிஸில் முறையிட்டுள்ளார். 

தனக்கு 04, 07, 09 மற்றும் 13 வயதான நான்கு சகோதரர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு சிறிய வயதாக உள்ளபோதே தாய் வௌிநாடு சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில் தனக்கும் தனது சகோதரர்களுக்கும் தந்தை உரிய முறையில் உணவளிப்பதில்லை, இதனால் கல்வி நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்க முடியவில்லை எனவும் அவர் தனது முறைப்பாட்டில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் தம்மை நல்ல முறையில் பாதுகாக்குமாறு தமது தந்தைக்கு அறிவுறுத்துமாறும் சிறுவன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கமைய கெபிதிகொல்லாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments:

Post a Comment