Monday, December 7, 2015

வசீம் தாஜுதீனின் கொலை (CCTV) காட்சிகளை அம்பலப்படுத்தும் ராஜித (விபரம் இணைப்பு)

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற விதம் குறித்தான கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
இது குறித்தான CCTV காட்சிகளில், வசீம் தாஜுதீன் CR & FC மைதானத்தின் உணவத்திலிருந்து உணவை பெற்றுக்கொண்டு வெளியேறுவது, அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது மற்றும் அடித்து துன்புறுத்தி கொலை செய்வது உள்ளிட்ட காட்சிகள் காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும், இக்கொலை தொடர்பான காட்சிகளில், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காணப்படுவதை அவதானிக்கலாம் எனத் தெரிவித்தார்.
 
நேற்று (06) பேருவளை நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
குற்றப் புலனாய்வு பிரிவினர் இது குறித்தான சாட்சியங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment