வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக காடழிப்பதற்கு கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் தலைமையிலேயே அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக திங்கட்கிழமை (07) சபையில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் ஒருவார காலத்துக்குள் அதிகாரிகள் குழுவொன்று அங்கு அனுப்பிவைக்கப்பட்டு அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நிலைமைகள் தொடர்பான அறிக்கை பெறப்பட்டு அதன் பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவம் ஆகிய அமைச்சுகள்மீதான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி சிறிசேன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment