Tuesday, December 8, 2015

பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தை நாடியது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் இலங்கை வருகையை தடை செய்த, பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக உயர் நீதி மன்றத்தை நாடியது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 08.11.2015 அன்று நடத்தப்பட்ட திருக்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு நிகழ்வுக்கு வருகை தரவிருந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் வருகை அனுமதியை (விஸா) கடைசி நேரத்தில் எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி இரத்துச் செய்து உத்தரவிட்ட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கள் செய்தது தவ்ஹீத் ஜமாஅத்.

மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் வருகைக்கான உத்தியோகபூர்வ அனுமதியை இலங்கை முஸ்லிம் கலாசார தினைக்களம், முஸ்லிம் விவகார அமைச்சு, மற்றும் குடிவரவு குடியகழ்வு தினைக்களம் ஆகியவை முறையாக தந்திருந்தும், ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் தேவைக்காக எவ்வித காரணமும் இல்லாமல் ஜெய்னுலாபிதீன் அவர்களுக்கு வழங்கப்பட்ட விஸா அனுமதி கடைசி நேரத்தில் பாதுகாப்பு செயலாளரினால் இரத்துச் செய்யப்பட்டது.

முஸ்லிம்கள் என்ற பெயரில் கப்ருகளை வணங்குதல், தாயத்து, தகடு அணிதல், மந்திரித்தல், பேயோட்டுதல், ஜின் வைத்தியம் பார்த்தல், சூனிய நம்பிக்கை, பால் பார்த்தல், மை பார்த்தல், மத்ஹபுகளை பின்பற்றுதல், தரீக்காக்களை பின்பற்றுதல் போன்றவற்றினூடாக குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான காரியங்களில் ஈடுபட்டு வரும் இலங்கை முஸ்லிம் உலமாக்களுக்கு அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் வருகை பெரும் பிரச்சினையாக மாறி அவர்களின் வருமானத்திற்கே அது ஆபத்தாக முடிந்து விடும் என்பதினால் அவருடைய வருகையை மேற்சொன்ன காரியங்களில் ஈடுபடுவோர் கடுமையாக எதிர்த்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 05.11.2015 அன்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா (?) சபை அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் வருகையை நிறுத்திக் கொள்ளுமாறு கூறி நிர்வாக பொறுப்பாளராக இல்லாத ஒருவரின் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தையும் வெளியிட்டது. அத்துடன் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகைக்கான அனுமதியை தடை செய்யுமாறு முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கும் அளுத்தம் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள் மௌலவி தாசிம், பாசில் பாருக் மற்றும் தஹ்லான் போன்றவர்கள் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் இலங்கை வருகையை தடை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் நேரடியாக கோரிக்கை வைத்திருந்தார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முகவரி அற்றுப் போன, தனது சொந்த வாழ்வில் ஒரு சதவீதம் கூட ஒழுக்கம் பேணாத அஸாத் ஸாலியும், கப்ரு வணக்கத்தை இஸ்லாம் என்று நினைத்துக் கொண்டு கப்ருகளை வழிபடுவதையும், மரணித்தவர்களிடம் பிரார்த்திப்பது, கத்தம், பாத்திஹா, கந்தூரி ஓதுவது போன்ற காரியங்களில் ஈடுபடும் தரீக்கா சிந்தனையுள்ளவர்களும் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் வருகைக்கு எதிராக செயல் பட்டார்கள். இவர்கள் தான் இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள் என்றும் தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.

அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் வருகையினால் நாட்டில் இனங்களுக்கு இடையில் பாரிய பிரச்சினை வரும், ஆகவே இவருடைய வருகையை தடை செய்யுங்கள் என்று கோரி அஸாத் ஸாலியின் கட்சியின் சார்பில் தேதியைக் கூட சரியாக எழுதாமல் ஒரு கடிதம் பாதுகாப்பு செயலாளருக்கு கையளிக்கப்பட்டிருந்து. அதே கடிதத்தில் பி.ஜெய்னுலாபிதின் அவர்களின் வருகையை தடை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் அவர்கள் குடிவரவு, குடியகழ்வு தினைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதனை அஸாத் ஸாலி தரப்பினர் சமூக வலை தளங்களிலும் பரவ விட்டிருந்தனர். நாட்டின் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவடங்கிய ஒரு கடிதம் சமூக வலை தளங்களில் பரவும் அளவுக்கு மெத்தனப் போக்கு கையாளப்பட்டிருந்தது.

எவ்வித உரிய காரணங்களும் இன்றி ஒரு சில அரசியல் மற்றும் ஆன்மீக வருமையில் இருக்கும் உலமாக்களுக்காக தன்னிச்சையாக முடிவெடுத்து அறிஞர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் இலங்கை வருகையை தடை செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 04.12.2015 அன்று அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு உயர் நீதி மன்றத்தில் தாக்கள் செய்யப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் மார்க்கச் சுதந்திரம் எவ்வித்திலும் மட்டுப்படுத்தப்பட முடியாதது என்பது இலங்கை அரசியல் சாசனத்தின் ஆணித் தரமான விதியாகும். இதற்கு நேர் மாற்றமாக பாதுகாப்புச் செயலாளர் எவ்வித சட்ட ஒழுங்கையும் கடைபிடிக்காமல் அதிரடியாக அறிஞர் பீ. ஜெயினுலாபிதீன் அவர்களுக்காக சட்ட ரீதியாக பெறப்பட்ட வீஸாவை இரத்துச் செய்தமையானது அதிகார துஷ்பிரயோகம் மாத்திரமன்றி ஒரு சிவில் அமைப்பின் அடிப்படை உரிமையையும் பட்டவர்த்தனமாக மீறிய செயல் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. எனவே இது போன்ற அநியாயங்கள் நல்லாட்சி என்று தம்மட்டமடிக்கும் தற்போதைய அரசின் எதிர்கால நடவடிக்கைள் சீராக அமைவதற்கு ஒரு காரணியாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த வழக்கு தாக்கள் செய்யப்பட்டுள்ளது. எந்த இஸ்லாமிய அமைப்பினதும் கருத்துச் சுதந்திரம் அரசியல் தலையீட்டினூடாக மட்டுப்படுத்தப்பட கூடாது என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்த வழக்கு பதிவு செய்வதன் மூலம் எதிர்பார்க்கிறது.

இதன் மூலம் எதிர் காலங்களில் அரச அதிகாரிகள் தமது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் இது போன்ற சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்தித்தே ஆகவேண்டும் எனும் அச்ச நிலை ஏற்படுத்தப்படும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

மேலும் கருத்தை கருத்தால் வெல்ல முடியாது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இஸ்லாமிய (?) அமைப்புகள் இது போன்ற காரியங்களுக்கு துணை புரிந்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் சமுதாயத்தின் உரிமைகளை பரிகொடுக்கும் காரியங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என்பதை சமூக அக்கரையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதறகாக சிங்கள அரசியல் சக்திக்கு முன்னால் மண்டியிடுபவர்கள் எதிர்காலத்தில் இதே கருத்துச் சுதந்திரம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் மட்டுப்படுத்துவதற்கு இதே பாணியில் சிஙகள் அரசியல் சக்திகள் களமிறங்கினால் அதற்கு வழி வகுத்துக் கொடுத்த இவர்கள் சமூக துரோகிகள் என்று வரலாற்றில் பதியப்படுவீர்கள் என்பதை மறக்கக் கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை விடுக்கிறது.

No comments:

Post a Comment