Sunday, September 24, 2023

உறவுகள் தொடர தடையாகும், அனாவசிய சம்பிரதாயங்கள்!


முன்னொரு காலம் விருந்தோம்பல் சுவையான ஒன்று கூடலாக இருந்தது.

அதுவே இப்போது சுமையான ஒன்று கூடலாக மாறிவிட்டது.

விருந்தோம்பலை தம்பட்டம் அடிக்கும் ஒரு ஒன்று கூடலாக மாற்றிவிட்டோம். அதனால் 

இனிப்பான சந்திப்புக்கள் கசப்பான சந்திப்புக்களாக மாறிவிட்டன.

ஒரு காலம் விருந்தினருக்காக நம் வீடுக் கதவுகள் திறந்திருந்தன. உற்றார்கள், உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எளிமையாக இருந்த விருந்தோம்பலை பகட்டு விருந்தோம்லாக மாற்றிவிட்டோம்.

விருந்தினர்கள் ஏதாவது சுமந்து வராவிட்டால் குறையாக பார்க்க ஆரம்பித்துவிட்டோம். விருந்தளிப்பவர் இருக்கும் பணதையெல்லாம் இறைத்தாவது விருந்து கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்து விட்டோம். அதனால் சுகமான ஒன்று கூடல் சுமையான ஒன்று கூடலாக மாறிவிட்டது. 

இந்த வீண் சுமையால் உறவினர்கள் வருகை குறைந்து விட்டது, குடும்ப உறவுகள் தூரமாகிவிட்டன. ஏச்சுப் பேச்சுக்கள் அதிகரித்து விட்டன. 

போலியான வாழ்க்கைக்கு பழகினோம். 

விருந்தினர் வருகையை இழந்தோம்

விருந்தோம்பல் என்பது புன்முறுவலாகும் 

கனிவான பேச்சாகும். இருப்பதை கொடுப்பதாகும். 

உற்றார், உறவினர்கள் நம் வீட்டுக் கதவை தட்டாமல் இருப்பதை விட ஒரு கப் காபியுடனும் ஒரு துண்டு பிஸ்கெட்டும் ஒன்றுகூடி பேசி மகிழ்வது சிறந்ததாகும். 

விருந்தினர்களுக்காக வீட்டு வாசல்கள் திறந்துவையுங்கள்! விருந்தினர்கள் வருகை தரும் அளவுக்கு செல்வமும் செழிப்பும் கூடவே வருகை தரும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

✍ தமிழாக்கம் / imran farook

No comments:

Post a Comment