Monday, October 30, 2023

முதுகெலும்புள்ள அரபி இல்லையே..

 பிணங்களைத் தின்னும்

கழுகினை அழைத்து

இனத்தின் குருதியை

விருந்தாய்ப் படைக்கின்றன


குருதியைச் சிந்த வரும்

கொடிய விலங்குகளுக்கு

மஞ்சள் தெளித்து

மஞ்சம் விரிக்கின்றன


எண்ணெய்க்காய் இவர்கள்

குருதியை ஓட்டும்

சமாதானச்சாயப் பூசிய 

சதிகார முகங்கள் பற்றி..

ஒற்றுமைதனையழித்து

ஒவ்வொன்றாய் ஏப்பமிடும்

பாஸிஷ விஷம் கொண்ட

குரூர நகங்கள் பற்றி

நகங்கள் பற்றி…

உரத்துப் பேச-ஒரு 

முதுகெலும்புள்ள

அரபியாவது இல்லையே!

-✍️யாழ் அஸீம்-



No comments:

Post a Comment