Monday, April 19, 2021

முஸ்லிம் அரசியல்வாதிகளை, சந்தேகிக்கும் மல்கம் ரஞ்சித்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கும் 20வது திருத்தத்திற்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின், ஆதரவை பெற்றுக்கொண்டமைக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் 20வது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமையும், அவரது கட்சி உறுப்பினர்கள் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும், ரிசாத் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையும் கேள்விக்குறிய விடயங்களாக காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும்இணக்கப்பாடொன்றின் ஒரு  பகுதியாகயிருக்கலாம் எனவும் அவர்தெரிவித்துள்ளார். TL

கிரிக்கெட் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேக்கு 8 ஆண்டுகள் தடை


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையின் கிரிக்கட் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேக்கு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து எட்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லொக்குஹெட்டிகிற்கான தடை ஏப்ரல் 3, 2019 இல் இருந்து அமுலுக்கு வருகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தினால், குற்றவாளி எனக் கண்டறிந்ததையடுத்து, இலங்கையின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே அனைத்து கிரிக்கெட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் விதிகளை மீறிய மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தில்ஹார மீது குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இலங்கையர் வபாத்


இலங்கையில் பஸ்யாலை பகுதியை சேர்ந்த முஹம்மத் ஸல்மி முஹம்மத் ஸவாஹிர் (42 வயது) அவர்கள் 19/04/2021 திங்கட்கிழமை  கத்தாரில் ஹமத் வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் குடும்பத்தினருக்கு இவ்விழப்பை ஏற்கும் மன வலிமையை  வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்  இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும் .

CWF

நோன்பு பிடித்த வில்லியம்சனும், வார்னரும் - ரஷீத் கான் தெரிவிப்பு (வீடியோ)


புனித ரமலான் மாதத்தில் ரஷீத் கான், முஜீப் உர் ரஹமான் உள்ளிட்ட பல வீரர்கள் நோன்பு உள்ளனர். ரஷீத் கான் வெளிப்படுத்தியபடி எஸ்.ஆர்.எச் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரும் தங்கள் குழு உறுப்பினர்களுடன் நோன்பை அனுபவித்துள்ளனர்.

ரஷீத் கான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டு 2 பேர் இன்று எங்களுடன் உண்ணாவிரதம் இருந்தனர் என்று எழுதினார்.

அந்த வீடியோவில் இரண்டு பேட்ஸ்மேன்களையும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு ரஷீத் கேட்கிறார். 'நல்லது ஆனால் நான் மிகவும் தாகமாகவும் மிகவும் பசியாகவும் இருக்கிறேன் என் வாய் மிகவும் வறண்டுவிட்டது' என்று வார்னர் கூறினார். ஐபிஎல் 2021 இல் இன்னும் இடம்பெறாத வில்லியம்சன் 'மிகவும் நல்லது நன்றி' என்றார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)மத்ரசாவில் கற்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் - 350 இஸ்லாமியர்கள் வன்முறைகளில் ஈடுபட பயிற்சி பெற்றுள்ளனர் - அருட்தந்தை சிறில்


தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

 பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று -19- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த விடயம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில், தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இது வரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் சஹ்ரான் என்பவரால் தௌஹித் ஜமாஅத் அமைப்பினால் அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இதனுடன் தொடர்புடைய 15 அமைப்புக்கள் நாட்டில் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்புக்களால் இஸ்லாம் இராச்சியம் , ஏனைய மதங்களை அழித்தல் , இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்காக அவர்களை பழிவாங்குதல் உள்ளிட்ட 5 விடயங்கள் பரப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் பாரதூரமான அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 350 இஸ்லாம் இளைஞர் யுவதிகள் இதில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு இவர்களுக்கு டி 56 ரக துப்பாக்கியை உபயோகிப்பதற்கும், வெடி பொருட்கள் தொடர்பிலும், குண்டுகளை தயாரிப்பது தொடர்பிலும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. குறித்த 350 இளைஞர் யுவதிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவினர் தற்கொலை குண்டுதாரிகளாகவும் , ஏனையோர் ஆயுதமேந்தி போராடுபவர்களாகவும் உள்ளனர்.

குறித்த 350 பேரும் அடிப்படைவாதம், வன்முறை, தீவிரவாத செயற்பாடுகளில் முழுமையான பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மாத்திரமே இது வரையில் உயிரிழந்திருக்கக் கூடும்.

எஞ்சியோர் நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் இதுவரையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இது இவ்வாறிருக்க தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 400 வாள்கள் மாத்திரமே மீட்க்கப்பட்டுள்ளன. எஞ்சியவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலையில் நாடு பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் ? இவை அனைத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள விடயங்களாகும். நாடு தற்போது பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளது.

இஸ்லாமிய பாட புத்தகங்களில் 10 - 13 ஆம் வகுப்புக்களுக்கு வஹாப்வாத கற்கை நெறி கற்பிக்கப்படுகிறது. இதனை கற்ற எத்தளை இளைஞர் யுவதிகள் மனதளவில் மாற்றமடைந்திருப்பார்கள் ? எனவே இவ்வாறான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை.

வெறுமனே கத்தோலிக்க மக்களுக்காக மாத்திரம் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. முழு நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறே கோருகின்றோம்.

மத்ரசா பாடசாலைகள் தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டது. இவற்றில் கற்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். விசேட நிபுணர்கள் கொண்ட குழுவினரால் இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதோடு , இதனை தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

இவற்றை முறையாக செயற்படுத்தினால் மாத்திரமே நாட்டு மக்களை அபாயத்திலிருந்து பாதுகாக்க முடியும். இதனை சாதாரண விடயமாக்க முயற்சிக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுத்து நியாயத்தை வழங்க வேண்டும் என்றார்.

ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 6)


ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

6ம் நாளுக்கான கேள்விகள் 

01. ஒரு மூலகத்தின் பெயரை தலைப்பாக கொண்டமைந்த அத்தியாயம் எது?

02. "சுவர்க்கம்" எனும் சொல் அல்-குர்ஆனில்  எத்தனை தடவைகள் இடம்பெற்றுள்ளன?

03. "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" குறித்த ஹதீஸ் ஒன்றை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

04. 2020 சமாதானத்துக்கான "நோபல்பரிசை" யார்? என்ன காரணத்துக்காக பெற்றுக்கொண்டார்?


புத்தாண்டில் பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி - அமைச்சர்கள், Mp க்கள், பணிக்குழாமினருடன் சந்திப்பு


பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்தார்.

சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் திட உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.04.19