Showing posts with label JaffnaMuslim. Show all posts
Showing posts with label JaffnaMuslim. Show all posts

Wednesday, January 31, 2024

காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுமா..?


 காஸா இனப்படுகொலை அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகத் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாரிஸில் உள்ள கட்சிகள் ஒரு ஒப்பந்தத்தை எட்டியதாகத் தெரிகிறது. இந்த உடன்படிக்கைக்கு எகிப்தும் கத்தாரும் மத்தியஸ்தர்கள்.


சனிக்கிழமை போர் நிறுத்தத்தை அறிவிக்க கத்தார் தயாராகி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி , 


 காஸாவில் போர் நிறுத்தத்திற்கு வாஷிங்டன் நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


அதே நேரத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ஹமாஸின் உயிர்வாழும் திறனில் பெருகிய முறையில் நம்பிக்கையுடன் இருக்கும் அதே வேளையில், இஸ்ரேலின் முக்கிய போர் இலக்குகளில் ஒன்றின் மீது சந்தேகத்தை எழுப்பும் போது ஒரு உடன்பாட்டை எட்டுவது அவசர தேவை என்று கூறுகிறது.


அறிக்கைகள் கூறுவது என்னவென்றால், கைதிகளுக்கு 3 நிலைகள் முன்மொழியப்பட்டுள்ளன, முதல் கட்டத்தின் காலம் குடிமக்களுக்கு 45 நாட்கள் மற்றும் இரண்டாவது கட்டம் இராணுவ வீரர்களுக்கு, ஆனால் காலவரையறை குறிப்பிடாமல். மூன்றாவது கட்டம் இரு தரப்புக்கும் இடையே உடல் பரிமாற்றம் ஆகும், மேலும் இது ஒரு கால அளவைக் குறிப்பிடாமல் உள்ளது.


நெதன்யாகு இன்னும் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார், ஆனால் இறுதியில் அவர் அதை ஏற்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் பின்னர், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நாடு கிடைக்கும் என்றும் அது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படும் என்றும் பிரிட்டன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்


CEYPETCO எரிபொருள் நிறுவனம் இன்று  (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.


அதன்படி,  ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.


ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.


ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.


அத்துடன், மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அல் ஜசீரா வெளியிட்டுள்ள தாக்குதல் (வீடியோ)


காசா நகரில், இஸ்ரேல் ராணுவத்துடன் சண்டையிடுவதாக இஸ்லாமியப் போராளிகள் கூறும் வீடியோவை அல்-ஜசீரா வெளியிட்டுள்ளது.

போராளிகள் பிரிவினரால் குறிவைக்கப்பட்ட பின்னர், ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இயந்திரங்கள் எரிக்கப்படும் காட்சிகளும் குறித்த வீடியோவில் காட்டப்படுகிறது.


 

Tuesday, January 30, 2024

3 விடயங்கள் நிகழும்வரை காசாவில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் திரும்பாது


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, காசா பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறவோ அல்லது ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பாதுகாப்பு கைதிகளை விடுவிக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய கருத்துக்களில், அவர் மேலும் கூறினார், “இந்தப் போரின் அனைத்து நோக்கங்களையும் அடைவதில் இருந்து நாங்கள் முடிவுக்கு வரமாட்டோம். 


அதாவது ஹமாஸை ஒழிப்பது, எங்களின் பணயக்கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்புவது மற்றும் காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவது  என்று தெரிவித்துள்ளார்.

Monday, January 29, 2024

காசாவில் 122 ஊடகவியலாளர்கள் வீரமரணம் - தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்


காசாவில் மேலும் 2 ஊடகவியலாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.


காசாவின் அவலங்களை, காசா ஊடகவியலாளர்கள் உலகிற்கு உரத்துச் சொல்வதால்தான், பலம்பொருந்திய மேற்கு ஊடகங்களை பொய் பிரச்சாரங்களை முறியடித்து, காசா தகவல்களை முஸ்லிம் உம்மத் அறிந்து கொள்கிறது.


இலங்கையில் உள்ள சில முஸ்லிம் ஊடகவியலாளர்களும், முஸ்லிம் சார்பு ஊடங்களும் காசா பற்றிய விவகாரங்களை தமக்குள் ஹராம் ஆக்கிக்கொண்டுள்ள நிலையில், அந்த காசா ஊடகவியலாளர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.


இஸ்ரேல் அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து இதுவரை, 122 காச ஊடகவியலாளர்களை படுகொலை செய்து, போர்க் குற்றம் புரிந்துள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.


அந்த 122 ஊடகவியலாளர்களினதும் தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.

இஸ்ரேலுக்கு சிக்கல் - புறக்கணிப்புக்கு தயாராகும் ஐரோப்பிய நாடுகள்


மே மாதம் ஸ்வீடனில் நடைபெறும் யூரோவிஷன் பாடல் போட்டியில் இருந்து இஸ்ரேலை வெளியேற்ற ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம் மறுத்ததால், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து இந்த நிகழ்வைப் புறக்கணிக்கத் தூண்டியதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.


பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் சிண்டிகேட் மற்றும் பாலஸ்தீனிய பிரச்சாரம் இஸ்ரேலை புறக்கணிக்க இஸ்ரேலை வெளியேற்றுவதற்கான அழைப்பு விடுத்துள்ளனர்.


2022ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா பங்கேற்க அனுமதித்தால் போட்டியை புறக்கணிக்கப் போவதாக ஐஸ்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் நார்வே முன்பு மிரட்டியதாக Haaretz தெரிவித்துள்ளது. 


ரஷ்யா தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பங்கேற்கவில்லை.

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் - ஈரானிய ஆலோசகர்களும், பொது மக்களும் படுகொலை


சிரிய - டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய தாக்குதலில் பல ஈரானிய ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sunday, January 28, 2024

அமெரிக்க இராணுவம் மீது ஆளில்லா விமான தாக்குதல் - 3 பேர் பலி, 25 பேர் காயம்


ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், குறித்த தாக்குதலில் 25 பேர் காயமடைந்து உள்ளதாகவும்  கூறப்படுகின்றது.


இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படும் முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UNRWA க்கான நிதியுதவியை நிறுத்துவது இனப்படுகொலையில் பங்கேற்பதாகும்.


ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில்,


9 நாடுகள் நிறுவனத்திற்கான நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. காசாவில் UNRWA இன் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்ய நன்கொடை நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்


பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்: UNRWAக்கான நிதியுதவியை நிறுத்தி வைப்பது என்பது காசாவில் இனப்படுகொலையில் பங்கேற்பதாகும்.

Saturday, January 27, 2024

இலங்கையின் அரபிக்கடலில் கடத்தப்பட்டது


சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அரபிக்கடலில் வைத்து  குறித்த படகு மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடத்தப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Friday, January 26, 2024

எனக்கு பின் வரும், அடுத்த பரம்பரையும் மக்களுக்கு சேவையாற்றும்


 ராஜபக்ஷ குடும்பம் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளது. எனக்கு பின் வரும் அடுத்த பரம்பரையும் அரசியலில் துடிப்புடன் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.


சமூக வலைதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டாறு 


இது குறித்து கருத்து தெரிவிக்கையில்; இன்று ஜனாதிபதி மகுடத்திற்காக பலதரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.


விவசாயிகள் முயற்சிக்கின்றனர், வியாபாரிகள் முயற்சிக்கின்றனர், ஊடக பிரதானிகள், முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகள் என பலதரப்பும் முயற்சிக்கின்றனர்.


ஆனால் நாம் யதார்த்த நிலையினை புரிந்து கொள்ள வேண்டும்.


பிரதான கட்சிகள் இன்றி ஏனைய கட்சிகளுக்கு அதிகாரம் வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மக்கள்.


அவர்கள் எங்கள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களாக இருக்கட்டும், இந்நாட்டை அழித்தவர்களாக இருக்கட்டும் அதற்கு மக்களுக்கான உரிமைகள் உண்டு.


ஆதனால் நாம் ஒருபோதும் குறிப்பிட்ட சிலருக்கு பயந்து அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டியதில்லை.


நாம் தீர்மானிக்க வேண்டியது, இந்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அன்றி அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்ல என்பதை நான் நம்புகிறேன்.


எனது அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறேன்.


முன்னிற்க வேண்டிய இடங்களில் முன்னிற்பேன். சிலர் 75 வருட அரசியலை குறை கூறுகின்றனர், இன்னும் சிலர் ராஜபக்ஷ குடும்பத்தினால் தான் 75 வருட சாபம் எனக் கூறுகின்றனர். எமது குடும்பம் 100 வருட அரசியலில் ஈடுபட்டுள்ளது.


ஆனால் 75 வருடம் ஆட்சி செய்ததில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றும் போது 17 பில்லியன் பொருளாதாரத்தையே 2005ம் ஆண்டு பொறுப்பேற்றார்.


யுத்தத்துடன் கூடிய ஒரு பொருளாதாரத்தையே பொறுப்பேற்றார். கடந்த காலங்களில் எதிர்பாராத விதமாக கொவிட் தொற்றினால் நாம் பின்னடைந்தோம்.


கொவிட் தடுப்பூசி இட்ட வைத்தியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கும் ஞாபகம் இல்லை கொவிட் என நோய் இருந்ததா என்று.


இது எமது நாட்டின் விதமா உலக விதமா என்பது எனக்குத் தெரியாது.


பல்வேறு சவால்களுக்கு நாம் முகங்கோடுத்தோம். உரப் பிரச்சினை, பொதுமுடக்கம் போன்ற பிரச்சினைகள் எழுந்தன.


அப்போது கோட்டாபய ராஜபக்ச உண்மையிலேயே உயிர்களைக் காப்பாற்றினார்என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள்

 பாராளுமன்றத்தில் ஜனவரி 10 ஆம் திகதி கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத தடைச்  சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் இன்று உயர்நீதி மன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருக்கும்SC/SD/27 /2014. இலக்க மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது   அவர்கள் வாதாடவுள்ளனர்.


பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவர் அடங்கிய நீதியரசர் குழாமினால்   பிரஸ்தாப வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Thursday, January 25, 2024

இரவு பகலாக பணியாற்றியவர்...


- Inamullah Masihudeen -


சிரேஷ்ட சட்டத்தரணி ஷீராஸ் நூர்டீன் அவர்களுடன் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பு!


கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி, சமூக ஆர்வலர் சகோதரர் ஷீராஸ் நூர்தீன் அவர்களை  அவரது அலுவலகத்தில் சந்திக்க விரும்பி தொடர்பு கொண்டபோது...


தனது நீதித்துறைசார் அலுவல்கள் மிகுந்த காலை வேளையில் சுமார் 45 நிமிடங்களை எனக்காக நேற்று 24.01.2024 ஒதுக்கித் தந்தார்.


போருக்கு பின்னரான இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், வன்முறைகள், பாதுகாப்பு கெடுபிடிகள், கொவிட் ஜனாஸா எரிப்பு விவகாரம் என பல சவால்களூக்கு RRT உடனடி நடவடிக்கை சட்டத் தரணிகள் குழுவை அமைத்துக் கொண்டு இரவு பகலாக பணியாற்றியவர்.


தேசிய ஷூரா சபையின் செயலாளராக எந்தவொரு அரசியல் சன்மார்க்க சிவில் சமூக தலைமைகளுடனான சந்திப்புகளில் நான் கலந்து கொண்ட பொழுதும் அங்கு ஆரவாரம் சபை அலங்காரம் எதுவுமில்லாமல் தனது பங்களிப்பை சட்டத்தரணி ஷீராஸ் நூர்தீன் வழங்குவதை காண்பேன்.


கோவிட்கால அவசரகால மற்றும் ஊரடங்கு காலகட்டங்களில் அவசர கலந்தாலோசனைகளுக்காக முஸ்லிம் லீடர்ஸ் போஃரம் என சமூக பிரதானிகளை கொண்ட குழுமத்தை நிறுவி அதனூடாக பல அரிய பணிகளை உடனுக்குடன் ஆற்றிய அவர்  தேவை கருதி என்னையும் குழும நிர்வாகிகளுள் ஒருவராக நியமித்திருந்தார்.


கட்சி அரசியல், இயக்க கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் சகல தரப்புகளுடனும் ஒருங்கிணைப்புகளை மேற் கொள்ளும் தூர நோக்குடைய பணிவும் பக்குவமும் பண்பாடுகளுமுடைய செயல் வீரர் ஆவார்.


கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனத்தை CDMF நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக கொழும்பு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார சவால்கள் குறித்த விவகாரங்களில் சக தோழர்களோடு தீவிரமாக பணி செய்பவர்.


மிகச் சிறந்த தேசப்பற்றாளர், ஜனநாயக வழிமுறைகள், நீதித்துறை, சட்டம், ஒழுங்கு, அடிப்படை மனித உரிமைகள் என  தனது பாதை பயணத்தை தீர்மாணித்து செயற்படும முன்மாதிரியான சட்டத்துறை சமூக ஆளுமை!


எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு நல்லாரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் தந்து சமூக தேசியப் பணிகளில் இன்னுமின்னும் சிறப்பாக பணியாற்றும் விவேகத்தையும் துணிவையும் அருள்வானாக!


அவரை பெற்று ஆளாக்கிய அன்பின் பெற்றார்கள் (ரஹ்) உடன் பிறப்புகள், மனைவி மக்கள், சந்ததிகளது ஈருலக வாழ்விலும் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

25.01.2024

Wednesday, January 24, 2024

மக்களுக்கு தெளிவில்லாமல் அவசர அவசரமாக இயற்றப்படும் சட்டங்கள்


நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் மக்கள் அறிந்துள்ளார்களா என Verité Research நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 


சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்களை தாம் அறிந்திருக்கவில்லை என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 66% பேர் தெரிவித்துள்ளனர். 


எனினும், 34% பேர் அதனை அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

 

நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்களை மக்கள் சுதந்திரமாக பாவிப்பது முடக்கப்படும் என 56% பேர் கூறியுள்ளனர்.


எனினும், 19% பேர் இந்த சட்டமூலம் சமூக ஊடகங்கள் தவறாக பாவிக்கப்படுவதை குறைக்கும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

Tuesday, January 23, 2024

காசா போர் நீண்டதாக இருக்கும், எங்களுக்கு மேலதிக படைகள் தேவை - இஸ்ரேலிய இராணுவத் தளபதி


இஸ்ரேலிய தலைமை அதிகாரி:


"நாங்கள் இன்னும் போராடுகிறோம், காசா போர் நீண்டதாக இருக்கும், எங்களுக்கு மீண்டும் ரிசர்வ் படைகள் தேவைப்படும்.

 

பாதுகாப்பாக வாழ்வதற்கான நமது உரிமைக்காக நாங்கள் ஹமாஸ் மீது மிகுந்த உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம்.

 

இஸ்ரேலிய நகரங்களையும் காஸாவையும் பிரிக்கும் பகுதியில் தற்காப்பு நடவடிக்கையின் போது நமது வீரர்கள் போரில் வீழ்ந்தனர்.

 

காசா உறை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான பாதுகாப்பு நிலைமைகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க ஆழமான விசாரணை நடத்தி பாடம் புகட்டுவோம்" என்றார்.

Monday, January 22, 2024

A/L நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பெப்ரவரி முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி


உயர்தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால், ஊடகத்துறை எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்கள்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்,  முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கம் இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்ற செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.


இதற்கு எடுத்துக் காட்டாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைப் பாதுகாப்புச் தடைச்சட்டத்தைக் கூறலாம்.


இவ்வாறான சட்டம் இந்நாட்டில் வாழும் சிவில் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள்  ஆகியவற்றை இல்லாது செய்வதற்க்குப் பயன்படுத்தப்படுகின்றமை அறிந்த யதார்த்தமாகும்.


அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது அமுலுக்கு வருமானால் எதிர்காலங்களில் குடிமக்கள் சுதந்திரமாகத் தகவல்களைப் பெறுவதற்கும்,  அணுகுவதற்கும், கையாள்வதற்கும்,  கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இருக்கும்.


நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் என்றால் என்ன?


நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் 2023 செப்டெம்பர் 18ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 2023 ஒக்டோபர் 3ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்ட மூலமானது குறிப்பிட்ட நோக்கங்களுடன் ‘நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு’ ஒன்றை நிறுவ வேண்டும் என்று கூறுகிறது.


இவ்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின்படி ஒரு நபர் நிகழ்நிலையில் பதிவிடுவதை அல்லது பகிர்வதை குற்றமாக்க முடிவதுடன் இது 20 ஆண்டுகள் வரை தண்டனைத் தடைகளை விதிக்கும்.


இந்தச் சட்டமூலத்தால் குடிமக்கள் நேரடியாக எதிர்கொள்ளவுள்ள சவால்கள்.


நியாயமற்ற தன்னிச்சையான அல்லது தற்காலிகமான முறையில் செயல்படுத்தக்கூடிய அதிகப்படியான மற்றும் தெளிவற்ற குற்றங்களை இந்த சட்டமூலம் உருவாக்குகிறது.


ஒப்புதலுக்கு உட்பட்டு தன்னிச்சையான அடிப்படையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்கக்கூடிய ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவுக்கு தெளிவற்ற வரையறுக்கப்பட்ட, பரந்த அதிகாரங்களை இந்த சட்டமூலம் வழங்குகிறது.


இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் சட்டமாக்க முடியாது என்ற அடிப்படையில் சட்டமூலத்தின் அரசியலமைப்புத்தன்மை சவாலுக்கு உட்படுத்தக் கூடியது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவிக்கிறது.


இந்த சட்டமூலம் அமைச்சரால் நிபுணர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட பிரஜைகளுக்கு பரந்த மற்றும் அதிகப்படியான தேடல் மற்றும் பறிமுதல் அதிகாரங்களை வழங்குகிறது.


அவை தன்னிச்சையானவை மற்றும் கணிக்கமுடியாதவை. அரசியலமைப்பின் 14(1) (a), (b) (c), (e), (f) மற்றும் (g) மற்றும் உறுப்புரை 10 ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதை இந்த சட்டமூலம் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி முடக்குகிறது.


 ‘நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு’ என்றால் என்ன?


நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவானது அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கு உட்பட்டு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.


இவ்உறுப்பினர்கள் தகவல், தொழில்நுட்பம், சட்டம், ஆளுகை, சமூக சேவைகள், பத்திரிகைத்துறை, அறிவியல், தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆணைக்குழுவானது கீழ்கண்ட விரிவான அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.


தேசிய பாதுகாப்பு, பொது சுதந்திரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது தீய எண்ணம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவிக்கும் தவறான அறிக்கைகளை தடை செய்கிறது.


நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய குற்றங்கள் யாவை?


நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது பலவிதமான குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இவற்றுக்கு சிறைத்தண்டணை மற்றும்ஃஅல்லது அபராதம் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் உள்ளன.


தேசிய பாதுகாப்பு, பொது சுதந்திரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது “தீய எண்ணம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவிக்கும்” தவறான அறிக்கைகளை தடை செய்கிறது. கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில், எதிர்மறையான கருத்துகளை வெளியிடுமாறு தனிநபர்கள், சேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைத்தரகர்களுக்கு ஆணைக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.


நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான ஆணைக்குழுவின் அதிகாரம் அரசியலமைப்பு உரிமைகளை மீறக்கூடும், இது சேவை வழங்குநர்கள் மற்றும் இறுதி பயனர்களை பாதிக்கும்.


சேவை வழங்குனர்களுக்கான பரிந்துரைகள், ஆணைக்குழுவின் வலைத்தள பதிவு அதிகாரத்துடன் இணைந்து, இணக்கத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், இது சுதந்திரமாக நடவடிக்கைகளை நடத்துவதற்கான உரிமையை மீறக்கூடும்..


நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அணுகலை முடக்குவதற்கான பரிந்துரைகள் அரசியலமைப்பு உரிமைகளை மீறக்கூடும், ஏனெனில் இது சரியான சட்ட ஆய்வு இல்லாமல் தகவல் பரவலைக் கண்காணிக்;க அனுமதிக்கிறது.


வழிகாட்டுதல்கள் இல்லாமல் விதிகளை உருவாக்கும் அதிகாரம் (11(j) 12(1) தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் குறிப்பிட்ட அளவுகோல்கள் இல்லாமல் ஆணைக்குழுவின் விதிகளை உருவாக்கும் அதிகாரம் சமத்துவத்திற்கான உரிமையை மீறுகிறது, இது சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.


ஐக்கிய இராச்சியம் போன்ற நியாயாதிக்கங்களில் காணப்படும் இணையம் தொடர்பான சட்டங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தெளிவான வரையறைகள், கருத்துச் சுதந்திரத்திற்கான வலுவான பாதுகாப்புக்கள் மற்றும் விரிவான சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதில் பின்தங்கியுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குவிந்திருப்பதாலும், நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு சுயாதீனமின்மை காரணமாகவும் கவலைகள் எழுகின்றன.


இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் தெளிவு, சுதந்திரம் மற்றும் வினைத்திறன் மிக்க ஒழுங்குமுறை என்பன கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த வேறுபாடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறை அடக்குமுறைக்குள்ளாகுமானால் அது ஒட்டுமொத்தமாக நாட்டின் அரசியல், ஆட்சி, பொருளாதாரம், வாழ்வியல் ஒழுங்குமுறை அனைத்தையும் பாதிப்பதோடு நாட்டை அதலபாதாழத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே யதார்த்தம்.


நாட்டில் ஒரு “கொடுங்கோன்மை” ஆட்சி நடைபெற்றால் அதனை மாற்றுவதற்கான எந்தவொரு சமூக எழுச்சியையும் மேற்கொள்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. குறிப்பாக இளையோர் சமுதாயம் அவர்களது ஆக்கபூர்வமான எந்தவொரு சிந்தனையையும் வெளிப்படுத்த முடியாத நிலைமையில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாக இருப்பர்.


ஒட்டுமொத்தத்தில் கூறப்போனால் ஒருவர் சிந்திக்கவோ செயற்படவோ முடியாதவாறு நவீனத்துவ அடிமையாக இருக்கும் நிலை உருவாகும்.

Sunday, January 21, 2024

காசாவில் தொல்பொருட்களை சூறையாடிய இஸ்ரேலிய துருப்புக்களை ஐ.நா. விசாரிக்க வேண்டும்


காசாவில் உள்ள தொல்பொருள் பொருட்களை இஸ்ரேலிய துருப்புக்கள் சூறையாடியதாக வெளியான செய்திகளை ஐ.நா விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) கூறுகிறது.


"காசாவில் தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தால் நடந்து வரும் இனப்படுகொலையானது பாலஸ்தீன கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அனைத்து அம்சங்களையும் குறிவைக்கிறது" என்று CAIR இன் இயக்குனர் நிஹாத் அவாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


"கலாச்சார திருட்டின் சமீபத்திய போர்க்குற்றத்தை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் இந்த இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்புக்கான குருட்டு ஆதரவு நமது தேசத்தின் மனிதநேயம், முக்கிய மதிப்புகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நலன்களுக்கு செய்யும் தீங்கு குறித்து பிடன் நிர்வாகம் கண்களைத் திறக்க வேண்டும்."

சவுதியில் கடந்தவருடம் 163,300 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்


சவுதி அரேபியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 347,000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.


👉 2019: 21,600

👉 2020: 41,400

👉 2021: 27,300

👉 2022: 93,900

👉 2023: 163,300


ஆதாரம்: Dr. Saud Al-Ghamdi - சவுதி இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் செயலாளர்.

காசாவில் தியாகிகள் 25,105 ஆக உயர்வு - 62,681 பேர் காயமடைந்துள்ளனர்.


அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 25,105 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


 மற்றும் 62,681 பேர் காயமடைந்துள்ளனர். 


கடந்த 24 மணி நேரத்தில் 178 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 293 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.