(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை சாஹிபு வீதியின் திருத்த வேலைகள் மிகவும் மந்தகதியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டம் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.இருப்பினம் இதன் வேலைகள் அசமந்தப்போக்குடனேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால் இப்பிரதேச மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது விடயத்தில் சம்பந்தப்படடோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment