(Tw) ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முயற்சித்த இலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.இரண்டாண்டுகள் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முயற்சித்த மூன்று பெண்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப வேண்டுமென்றால் தலா ஐந்து லட்ச ரூபா பணம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் பெண்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முடியாத வகையில் சவூதி அரேபிய அரசாங்கம் சட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவசர தேவைகளுக்காக கூட பெண்கள் இரண்டாண்டுகள் ஒப்பந்த காலத்திற்கு முன்னதாக நாடு திரும்ப முடியாது என குறிப்பிட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதற்கு முன்னர் பெண்கள் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டுமென அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment