இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் புகைத்தலினால் தினமும் 60 பேர் உயிரிழப்பதாகவும் இத்தொகை வருடத்திற்கு 20 ஆயிரமாக அதிகரித்து வருவதாகவும் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேரளவில் பல்வேறு நோய் தாக்கத்தில் உயிரிழப்பதாகவும் அவற்றில் புகைத்தலினால் இறப்போரின் எண்ணிக்கை சராசரியாக தினமும் 60 ஆக காணப்படுவதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2013 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் புகைப்போரின் எண்ணிக்கை 9 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment