சவூதி அரேபியாவில் பணி புரிந்த இலங்கைப் பிரஜை யொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சம்மாவச்சத்தீவு கிராமத்தைச் சேர்ந்த வீ. மௌசூக் என்பரே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சவூதி அரேபியாவில் பணி புரிந்து கொண்டிருந்த போது சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது ஜனாஸா நேற்று சவூதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment