Tuesday, March 4, 2014

இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு உதவுங்கள்..!


புத்தளம் - ஜின்னாபுரம் ஆலங்குடா பிரதேசத்தை சேர்ந்த ஏ.எஸ் கபூர் பாத்திமா ரிகாஸா (வயது-12) எனும் சிறுமி இலுக்கோமியா (lewkemia) இரத்த புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.



இவரது தந்தையார் முச்சக்கரவண்டி சாரதி. வறுமையினால் இந்நோய்க்கு சிகிச்சை பெற முடியாதுள்ளது. 4 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாக பிறந்த இச்சிறுமி நான்கு வருடங்களுக்கு முன்னர் தாயினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இச்சிறுமியின் சிகிச்சைக்காக மாதத்திற்கு ஒருமுறை இரத்த மாற்று சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள மீனாட்சி மிசன் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்காக மாதம் ஒன்றிற்கு ரூபா 25 000 செலவு செய்ய வேண்டும்.



இதனை இச்சிறுமியின் தந்தையால் ஈடுசெய்ய முடியாதமையினால் நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றார்.



எனவே இச்சிறுமிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்வரும் விபரங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.



ஏ.எஸ்.கபூர் (தந்தை)

தொலைபேசி இலக்கம்-0723584862

வங்கி கணக்கிலக்கம்-71449879

இலங்கை வங்கி (நுரைச்சோலை கிளை)











No comments:

Post a Comment