அபூ அரப் என்ற பெயரில் பிரபலமான ஃபலஸ்தீனின் புரட்சி கவிஞர் இப்ராஹீம் முஹம்மது ஸாலிஹ் மரணமடைந்தார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த அபூ அரப், சிரியாவின் ஹிம்ஸில் வைத்து மரணமடைந்தார்.
கவிதை மூலம் புரட்சியை ஏற்படுத்திய அபூ அரப், 1931-ஆம் ஆண்டு ஃபலஸ்தீனின் ஸஜ்ரா கிராமத்தில் போராட்டம் மற்றும் இலக்கிய பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்.
1936-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்ட வீரியம் தூண்டும் கவிதை எழுதியவர் அபூ அரபின் .1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அபூ அரபின் தந்தை உயிர் தியாகம் செய்தார்.1982-ஆம் ஆண்டு அபூ அரபின் மகனும் கொல்லப்பட்டார். லெபனான், ஜோர்டான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் அகதியாக வாழ்ந்த அபூ அரப்,நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் ஃபலஸ்தீன் மக்களுக்காக கவிதைகள் எழுதி எதிர்ப்புப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தார்.
1980-ஆம் ஆண்டு முதன் முதலாக ஃபலஸ்தீன் பாடல் குழுவையும் அபூ அரப் உருவாக்கினார். 64 ஆண்டுகள் நீண்ட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பிறகு பிறந்த நாடான ஸஜ்ரா கிராமத்திற்கு செல்லவேண்டும் என்ற அபூ அரபின் கனவு, 2012-ஆம் ஆண்டு நிறைவேறியது. Thoo
No comments:
Post a Comment