Tuesday, March 11, 2014

திருமண விழா துப்பாக்கிச் சூட்டின் குண்டில் இருந்து விமானம் தப்பியது



குவைத்தில் உள்ள அல் அஹ்ம்னாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஓர் திருமணம் நடைபெற்றது.



இந்த திருமண விழாவில் பங்கேற்ற ஒருவர் உற்சாக மிகுதியில் தன்னிடம் இருந்த ‘ஏ.கே.-47’ தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக வானத்தை நோக்கி சுட்டார்.



அந்த துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டுகளில் ஒன்று அப்பகுதியின் வான் எல்லை வழியாக பறந்து சென்ற பயணிகள் விமானத்தை உரசியபடி சென்றது. இதனையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி தகவல் அளித்தார்.



அவர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு அளித்த புகாரையடுத்து, போலீசார் அந்த திருமண வீட்டுக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் துப்பாக்கியால் சுட்ட நபர் காரில் ஏறி தப்பித் தலைமறைவானார்.



எனினும், திருமண வீட்டாருக்கு போலீசார் அளித்த நெருக்கடியை தொடர்ந்து அந்த நபர் மறுநாள் போலீசில் சரணடைந்தார். விமானப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்க முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment