ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக அரசாங்கத்திற்குள் இருக்கும் தவறான புரிதலை திருத்தி அரசாங்கத்துடன், ஒத்துழைப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டிருந்தார்.
அப்போது, போர் காரணமாக 20 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம், நவநீதம்பிள்ளையிடம் கூறியிருந்தாகவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment