Thursday, March 6, 2014

இலங்கைக்கு எதிராக முன்னெடுத்த சகலவித எத்தனங்களும் தோல்வியில் முடிந்துள்ளது - அஸ்வர்





இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி, ஏ.எச்.எம் அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டமைப்பும், ஐ.தே.க.வும் இலங்கைக்கு எதிராக முன்னெடுத்த சகல விதமான எத்தனங்களும் தோல்வியில் முடிந்துள்ளதால் இவர்கள் தொடர்பில் கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்



காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் நவரட்ன மீதான அனுதாபப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.



இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,



இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளோடு இணைந்து எதிர்க்கட்சியினர் பல சதி முயற்சிகளில் ஈடுபட்டாலும் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணையானது இவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேறச் செய்யவில்லை.



என்னதான் இவர்கள் முயன்ற போதும் ஏமாற்றமே இவர்களுக்கு கிட்டியிருக்கிறது என்றும் மேலும் கிண்டலாகத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment