Friday, March 7, 2014

நான் இருக்கும்வரை பயம் வேண்டாம் (வீடியோ)





(Nf) அனைவரையும் சமத்துவத்துடன் நடத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.



தோட்டப் பகுதிகள், கிராமம், நகரங்கள் அல்லது வடக்கு, கிழக்கு என பாரபட்சம் காட்டுவதற்கு இடமளிக்காது, அனைவருக்கும் சமமான நன்மை கிடைக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டுயுள்ளார்.



மலையகத்தைச் சேர்ந்த 386 பேருக்கு தபால் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் வகையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.



மலையத்திலுள்ள மாணவர்களுக்கு தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.



இந்த விடயம் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு மாத்திரமல்லாது, அரசாங்கத்திற்கு கிடைத்த சிறந்ததொரு வெற்றியெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.



ஜனாதிபதி தமிழில் தெரிவித்த கருத்து :-





No comments:

Post a Comment