Saturday, April 19, 2014

பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தலாம்..!



பொதுபல சேனா இயக்கத்தின் நிறைவேற்ற அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



பொதுபல சேனா இயக்கத்தின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.



பல்வேறு தரப்பினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.



அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தம் மீது சிலர் பழி சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டின் பொறுப்புணர்ச்சி மிக்க பிரஜை என்ற காரணத்தினால் தாம் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.



பொதுபல சேனா இயக்கம் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment