ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நான்கு வருட திட்டத்தில், இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 2014ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரையில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் வெளியிடப்பட்டுள்ள இந்த நான்கு வருட திட்டத்தில், இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை, சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்படுதல், மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்த விடயத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை தொடர்ந்து 2017ம் ஆண்டு வரையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உன்னிப்பான கண்காணிப்பின் கீழ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment