Monday, April 21, 2014

அமெரிக்காவில் அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்டவைப்பு



அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காது நாய்கடித்து குதறியதில் முற்றிலும் அறுந்தது. உடனே, அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை நடந்தது.



ஆனால் ஆபரேசன் செய்து தையல் போட்ட பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்லவில்லை. அதை தொடர்ந்து அங்கு மிக மெல்லிய ரத்த குழாய் பொருத்தப்பட்டது. அதில் இருந்து தையல் போட்ட பகுதிகளுக்கு மட்டும் ரத்த ஓட்டம் சென்றது. உடலின் மற்ற பகுதிக்கு செல்ல வில்லை.



அதை சீரமைக்க ஆலோசித்த டாக்டர்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளை கொண்டு வந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை ரத்தத்தை உறிஞ்சும் போது அப்படியே தையல் போட்ட இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கும் ரத்தம் சென்றது.



இதற்கிடையே ஆபரேசன் செய்த இடத்தில் புதிதாக ரத்த குழாய்கள் உருவாகி நிலைமை சீரானது. அதை தொடர்ந்து அந்த அட்டை பூச்சிகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. மொத்தத்தில் இந்த ஆபரேஷனுக்கு அட்டை பூச்சிகளை மருந்து ஆக டாக்டர்கள் பயன்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.


No comments:

Post a Comment