Tuesday, April 22, 2014

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் போல் பார்ப்ரேஸ் பதவி விலகினார்





ஸ்ரீ லங்கா கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளரான போல் பார்ப்ரேஸ் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.



இது தொடர்பான விலகல் கடிதத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மீண்டும் தமது, சேவையை எதிர்பார்க்க வேண்டாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, போல் பார்ப்ரேஸ் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்றுவிப்பார் பதவியை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment