Thursday, May 29, 2014

புத்தளத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள் ஒரு மாதத்திற்கு மூடுவதற்கு தீர்மானம்



புத்தளம் நகரிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள் அனைத்தும் இன்றிலிருந்து (30) ஒரு மாத காலத்திற்கு மூடுவதென புத்தளம் நகரசபையில் முடிவு செய்யப்பட்டது.



வியாழனன்று (29) புத்தளம் நகர சபையின் மாதாந்த அமர்வு தலைவர் கே. ஏ. பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வடமேல் மாகாண சபையால் அனுப்பப்பட்ட கடிதம் செயலாளரினால் வாசிக்கப்பட்டது. மாடுகளுக்கு மீண்டும் நோய் ஏற்பட்டிருப்பதாகவும் இறைச்சிக் கடைகளை ஒரு மாத காலத்திற்கு மூடுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது அதன் பிரகாரம் இறைச்சிக் கடைகளை மூடி ஒரு மாதத்தின் பின்னர் திறப்பது குறித்து மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டு வருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.




No comments:

Post a Comment