Tuesday, May 27, 2014

அரசாங்கத்திலிருந்து விலக முடியுமா..? விமல் வீரவன்சவுக்கு சவால்..!



தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகிய ஊவா மாகாண சபை உறுப்பினர் மிஹிமல் முனசிங்க, அந்த முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.



முடியுமானால் அரசாங்கத்தில் இருந்து விலகி தெளிவான அறிக்கை வெளியிடுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.



வெறுமனே அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு விலகுவதாக எச்சரிக்கை விட்டுக்கொண்டிருக்காமல், விலகுவது தொடர்பில் உறுதியான அறிவிப்பை விமல் வீரவங்சவினால் விடுக்க முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளர்.



ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிஹிமல் முனசிங்க கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற மாகாண சபை அமர்வின் போது தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment