கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மொகான் விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
கல்முனை பிரதேச செயலகத்தின் வரலாற்றில் சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நௌபல் கடந்த மார்ச் - பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாள ர்ஜ.எம்.ஹனீபா, இங்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மகாஓயா பிரதேச செயலாளராக கடமையாற்றிய மொகான் விக்ரமாராச்சி கல்முனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஒருசில தினங்களில் இவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்படுகிறது.
99 வீதம் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பிரதேச செயலகம் ஒன்றுக்கு சிங்களவர் ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இது குறித்து கல்முனை சிவில் சமூக அமைப்புகள் தமது அதிருப்தியையும் ஆட்சேபனையையும் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment