Wednesday, June 11, 2014

“நல்ல வாழ்க்கைக்கான உலக முறைமை” மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பொலிவியா பயணம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று 12-06-2014 பொலிவியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.



பொலிவியாவில் நடைபெறவுள்ள ஜீ77 அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.



இந்த அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 14, 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.



“நல்ல வாழ்க்கைக்கான உலக முறைமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளது.



ஜீ77 அமைப்பில் இலங்கை ஸ்தாபக உறுப்பினராக அங்கம் வகிக்கின்றது.



இந்த அமைப்பில் தற்போது 133 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதி பொலிவியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல அரச தலைவர்களுடன் இரு தரப்பு சந்திப்புக்களை நடாத்த உள்ளார்.




No comments:

Post a Comment