Saturday, July 5, 2014

மஹிந்த ராஜபக்ஸவின் இப்தார் 19 ஆம் திகதி



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இப்தார் எதிர்வரும் 19 ஆம் திகதி (சனிக்கிழமை) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.



இதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற முஸ்லிம் பிரமுகர் ஒருவர் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.



இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பேரினவாத, கடும்போக்காளர்களின் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து முஸ்லிம் சமூகம் அதீத ஆர்வம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment