அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேற்று முன்தினம் இரவு போயிஸ் 737–700 ரக விமானம் புறப்பட்டது. அதில் 101 பேர் பயணம் செய்தனர்.
அவர்களில் 96 பேர் பயணிகள். 5 பேர் ஊழியர்கள் ஆவர். 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் அவசர காலத்தில் வெளியேறும் கதவு திடீரென திறந்து விட்டது.
இதனால் கேபின் அழுத்தத்தை இழந்ததால் 12 நிமிடத்தில் 11 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானம் தலைகீழாக சரிந்தது. இருந்தும் பதட்டப்படாமல் விமானி சாதுரியமாக செயல்பட்டார்.
கன்காஸ் மாகாணத்தில் உள்ள விசிபா மிட் கான்டினென்ட் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
விமானியின் சாமர்த்தியத்தால் அதில் பயணம் செய்த 101 பேரும் உயிர் தப்பினர். விமானத்தில் பயணி ஒருவர் அதன் நடுப்பகுதியில் உள்ள அவசரகால வெளியேறும் கதவை திறந்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.
ஆனால் அதை விமான நிறுவனம் மறுத்துள்ளது. அக்கதவை யாராலும் அவ்வளவு சுலபத்தில் திறக்க முடியாது. இச்சம்பவம் நடந்த போது அனைவரும் விமானத்தில் இருக்கையில் அமர்ந்தே இருந்தனர் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment