பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக் கூடாது என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதும் நடத்தி என்ன நடக்க வேண்டும் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல சேனா தடை செய்யப்படுமானால், தவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகளும் தடைசெய்யப்பட வேண்டும்.
இந்த அமைப்புகளை தடை செய்யக் கூடாது. அப்படி தடைசெய்தால், இந்த அமைப்புகள் பொய்யான வீரத்தை பெற்றுக்கொள்ளும். அதற்கு இடமளிக்க கூடாது எனவும் அமைச்சர் வீரவன்ஸ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment